சுசீந்திரம் மார்ச் 4
குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.கன்னியாகுமரியில் பெரிய விளை பகுதியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் 701 விற்பனை கண்டுபிடிக்கப்பட்டு கன்னியாகுமரி காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடையினை உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார், உத்தரவுப்படி, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் கன்னியாகுமரி காவல் துறை உதவியுடன் மூடி சீல் வைத்தார்.மேலும் , அந்த கடை உரிமையாளர் புகையிலை விற்பனையில் இரண்டாம் முறை குற்றத்தில் ஈடுபட்டதால் 50,000 ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும், இவ்வாறு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபட்ட காரணமாக, கொட்டாரம் பேரூராட்சி மூலம் நிரந்தரமாக இந்த கடையை மூடுவதற்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.