கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு செய்துள்ளார் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் தகவல்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சீறிய முயற்சியால் உலக செஸ் போட்டி, கேலோ இந்தியா, ஃபார்முலா கார்பந்தயம், கடற்கரை கையுந்து போட்டிகளை தமிழகத்தில் சிறப்பான முறையில் நடத்தியதன் விளைவாக தமிழக வீரர் வீராங்கனைகளின் திறமை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகமே வியந்து பார்க்கிறது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் பெருமிதம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பிக்கும் வகையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 541 தொகுப்புகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., சட்டமன்ற உறுப்பினர்கள் .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), .தே.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலையில் இன்று வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க, மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி, மண்டல அளவில் ஜீடோ போட்டிகள், வாள் சண்டை, பேட்மிட்டன், மாவட்டம் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் விளையாட்டுத்துறையில் திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் என்ற திட்டத்தை சென்ற வருடம் ஆரம்பித்து, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இதுவரைக்கும் சுமார் 30 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதேபோல் இன்று வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு வழங்கி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 தொகுதிகளுக்குட்பட்ட 333 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கப்படும். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பில் கிரிக்கெட் பேட், பந்து, கையுறை, ஸ்டெம்ப், தலைக்கவசம், கைப்பந்து, கால்பந்து, வளைபந்து, ஸ்கிப்பிங் கயிறு, கேரம்போர்டு, சிலம்ப குச்சி, செஸ், பேட்மிட்டன், தொப்பி, டி -சர்ட் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான விளையாட்டு கண்காணிப்புக் குழு மற்றும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் இளைஞர்கள் அந்த ஊராட்சி விளையாட்டு குழு உறுப்பினர்களாக பதிவு செய்து, விளையாட்டு உபகரணங்களை பெற்று, பயிற்சியில் ஈடுபட்டு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே, விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி திறமையை வளர்த்துக் கொண்ட வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் சேர்ந்து பயனடைய வழிவகை செய்யப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள இளைஞர்கள் அந்தந்த ஊராட்சி குழு உறுப்பினர்களாக பதிவு செய்து விளையாட்டு உபகரணங்களை பெற்று பயிற்சியில் ஈடுபடலாம் பயிற்சி மேற்கொண்ட பின்னர் முறையாக ஒப்படைத்தல் வேண்டும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், அந்த கிராம ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஊராட்சி அளவிலான குழும தலைவர், மகளிர் சுய உதவிக்குழு தலைவர் ஆகியோர் கொண்ட ஒரு “ஊராட்சி விளையாட்டு மன்றம் ” அமைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி ஊராட்சி மன்றத்தில் பயிற்சி பெறும் வீரர் வீராங்கனைகள் மற்றும் உபகரணங்கள் பயன்பாடு, பராமரிப்பு குறித்து கலந்தாய்வு நடத்தி அதன் அறிக்கையினை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு சமர்பிக்க வேண்டும்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பு திட்டத்தின் கீழ் விளையாட்டில் ஆர்வத்தினை ஏற்படுத்திடும் நோக்குடன் வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி பெற்று, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமையை வளர்த்துக் கொண்டு, நமது மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ, வீரர் யாசின் அவர்களை போல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி வெற்றி பெறவேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக/நகர்ப்புற பகுதிகளில் உள்ள வங்கி பெருங்கடன் 6 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலும், வங்கி நேரடி கடன் 90 குழுக்களுக்கு ரூ.9.58 கோடி என மொத்தம் 122 சுய உதவிக்குழுக்களில் 192 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 58 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளுக்கும், 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 541 தொகுப்புகளை கொண்டு செல்லும் 3 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துமனைக்கு பாராளுமன்ற தொகுதி மேம்மபாட்டு நிதியின் கீழ் ரூ.25 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான பேருந்தை வழங்கினார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஃபெஞ்சல் புயல் நிவாரணப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. முன்னதாக, ஃபெஞ்சல் புயல் காரணமாக பழுதடைந்த கே.ஆர்பி அணை சாலையை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் .பி.பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) .புஷ்பா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் .ராஜகோபல், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) மரு.சந்திரசேகர், உதவி திட்ட அலுவலர் .அருன்மொழி தேவன், முன்னோடி வங்கி மேலாளர் .சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் .மணிமேகலை நாகராஜ், நகர மன்ற தலைவர் .பரிதா நவாப், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் .ரஜினிசெல்வம், பேரூராட்சி மன்ற தலைவர்கள் .சந்தோஷ், .தம்பிதுரை, ஒன்றிய குழு தலைவர்கள் .விஜயலட்சுமி பெருமாள், .சினிவாசன், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.