கிருஷ்ணகிரி செப் 2: கிருஷ்ணகிரியை அடுத்த வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட குப்பச்சிபாறை அரசினர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கோரமண்டல், மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மாநகர் கிருஷ்ணகிரி ஆகியோர் இணைந்து நூறு மகளிருக்கு கோதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கோ-தான நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கோரமண்டல் தலைவர் அசோக்ரங்கராஜன், மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மாநகர் கிருஷ்ணகிரி தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர்கள் N.சரவணன், V.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் நூறு மகளிரை தேர்ந்தெடுத்து கறவை மாடுகள் வழங்கும் திட்டமான கோ-தானத்தை நடத்தினார்கள். இதில் தகுதியான பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த கறவை மாடுகளை சரியான முறையில் பராமரித்து தங்களது வாழ்வில் மேம்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர்கள் அசோகா, தர்மேஷ், பட்டேல், பிராந்திய ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மண்டல துணை ஆளுநர் சிவராமன், மற்றும் நேஷனல் அக்ரோ ஃபவுண்டேஷன் நிர்வாகி கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் கிருஷ்ணகிரி ரோட்டரி சங்க உறுப்பினர்களும் இந்த கோ-தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக, திட்ட இயக்குனர் பாலசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.
நூறு மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics