நாகர்கோவில் ஜூலை 11
சிறுவயதிலேயே குழந்தைகள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவினை மறுபுனரமைப்பு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா மறுபுனரமைக்கப்பட்டது. இதனை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். மேலும் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைக்கப்பட்ட சமூக நலக்கூடத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு திறந்து வைத்தார்.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன்,மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன்,தனிப்பரிவு காவல் ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.