வேலூர்_26
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும். வழக்கை CBIக்கு மாற்ற வேண்டியும் படுகொலைக்கு நீதி வேண்டி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பேர்ணாம்பட்டு நாலு கம்பம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுதி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சரவணன் பிச்சை, ராஜேந்திரன் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி. தலித் குமார் தமிழக மறுமலர்ச்சி கழக தலைவர் முகமது அலி , சந்தோஷ்குமார், மணிகண்டன், ஜெய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.