வேலூர்_05
வேலூர் வேலம்மாள் போதி பள்ளி வளாகத்தில் 04.08.2024 அன்று பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்த திட்டமிடல் கேரியர் பேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள உலகத்தரம் வாய்ந்த 20 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பலதரப்பட்ட கல்வி வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கினர். வேலம்மாள் பள்ளி குழுமத்தின் பள்ளி இயக்குனர் எம்.வி.எம் சசிக்குமார் அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இதில் 100க் கணக்கான பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களோடு கலந்து கொண்டு பயனடைந்தனர். விழாவின் நிறைவாக பள்ளி முதல்வர் ரதிக்குமாரி அவர்கள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.