மதுரை ஜூன் 27,
மதுரையில் கைதியிடம் லஞ்சம் பெற்ற சிறை காவலர் பணியிடை நீக்கம்
மதுரை மத்திய சிறையில் 1500 க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்த கைதிகளிடம் சிறை காவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சிறைத் துறையினர் நடத்திய விசாரணையில் செல்வகுமார் என்ற கைதிக்கு கஞ்சா விநியோகிக்க அவரது நண்பர் மூலமாக சிறைக் காவலர் முகமது ஆசிப் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து முகமது ஆசிப்பை பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்
உத்தரவிட்டார்.