நாகர்கோவில் ஜூன் 28
திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் புது மாப்பிள்ளை கைது நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான நித்யா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நித்யாவுக்கும் அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த 26 வயதான ராஜேஷ் என்பவருக்கும் கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் நேற்று திருமணம் நடந்தது.ராஜேஷ் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.. இந்த கல்யாணத்துக்கு சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள.இதில் நித்யாவின் உறவுக்கார பெண் ஒருவரும்
கல்யாணத்துக்கு வந்திருந்தார்.. இந்த பெண்ணும் போலீஸாக வேலை பார்த்து வருகிறார்.. மணமக்களை வாழ்த்தி விட்டு, அவர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்து கொண்டார்.. பிறகு உடனடியாக, புதுமண தம்பதிகளுடன் எடுத்து கொண்ட போட்டோவை, வாட்ஸ்அப் குரூப்பில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோவை பார்த்ததுமே பலரும் திரண்டு வந்து, ராஜேஷுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாக கமெண்ட் பதிவு செய்தனர்.. நிறைய பேர் ஒரே மாதிரியாக சொல்லவும், உடனே அந்த பெண் போலீஸ், நித்யா வீட்டிற்கு தகவல் கொடுத்தார். இதைக்கேட்டு பெண் வீட்டினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.. அந்த நேரம்பார்த்து, மணமக்கள் மண்டபத்திலிருந்து கிளம்பி, மணமகள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
மாப்பிள்ளையை மணக்கோலத்தில் பார்த்ததுமே மேலும் கொதிப்படைந்த பெண் வீட்டார், ராஜேஷை சுற்றிவளைத்து கொண்டனர்.. அவரை வெளியே போக விடாமல் பிடித்து வைத்து விட்டு, நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் ராஜேஷை , ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், ராஜேஷூக்கு ஏற்கனவே கல்யாணமானது உண்மைதான் என்றும், மனைவியை காவலர் குடியிருப்பில் வைத்திருப்பதும் தெரியவந்தது.
அதாவது, கொரோனா காலத்தில், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நித்யா வேலைக்கு சென்று வந்தாராம். எம்.காம்., சி.ஏ. மடித்துவிட்டு, ஒரு தனியார் ஆடிட்டிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போதுதான், நித்யாவுக்கு ராஜேஷ் பழக்கமாகியிருக்கிறார்.நித்யாவிடம் தான் ஒரு அனாதை என்று சொல்லி உள்ளார் ராஜேஷ்.. அப்பா அம்மா, உறவினர்கள் என்று யாருமே இல்லை என்றும், , நண்பர்களின் ஆதரவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இதை அப்படியே நித்யாவும் நம்பிவிட்டார். அத்துடன், ராஜேஷ் மீது பரிவும், கருணையும் பிறந்துள்ளது..
இந்த 3 வருடங்களாகவே நித்யாவும் ராஜேஷை உயிருக்கு உயிராக நேசித்துள்ளார்.. நேற்றைய தினம் கல்யாணத்திற்குகூட, வெறும் 5 நண்பர்களை அழைத்து வந்துதான் ராஜேஷ் திருமணம் செய்துள்ளார். இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், அதற்குள் ராஜேஷின் அந்த 5 நண்பர்களும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.. இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சிக்குள்ளான நித்யா, நித்திரவிளை போலீசில் புகார் செய்யவும், வழக்கு பதிவு செய்து ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.இதில் ஹைலைட் என்னவென்றால், முதலில் ராஜபாளையம் பட்டாலியனில் ராஜேஷ் வேலை பார்த்திருக்கிறார்.. அப்போது தன்னுடைய சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.
எனினும், பெண் வீட்டாருக்கு ராஜேஷை பிடிக்கவில்லை.. இதனால், அவருககு திருமணம் செய்து கொடுக்காமல் வேறு நபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.. ஆனால் திருமணம் நடந்த அன்றைய இரவே, தான் காதலித்த பெண்ணை, கணவன் வீட்டிலிருந்து தூக்கி வந்து தாலி கட்டிவிட்டார் ராஜேஷ்.. அந்த பெண்ணுடன் தான் இப்போது காவலர் குடியிருப்பில் குடும்பம் நடத்தியும் வருகிறார். முதல் கல்யாணம் நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டது.அதுமட்டுமல்ல, நேற்று காலை நித்யாவுடன் திருமணம் என்றால், நேற்று முன்தினம் மாலை வரை மனைவியுடன்தான் மணிமுத்தாறில் தான் இருந்தாராம் என்பது கூடுதல் தகவல்.