நாகர்கோவில் ஆக 8
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராம பேருந்துநிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், சாலை, பேருந்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டங்கள். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் – திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், தொழிலாளர்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் மகளிர் விடியல் பயணத்திட்டம் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர், உங்களைத்தேடி உங்கள் ஊரில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், நீங்கள் நலமா திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது ஆகியவை குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற அழகுமீனா, நேரில் சந்தித்தது, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கியது. அமைச்சர் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றார்கள்.