திருப்பூர், அக். 5:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து காதர் பேட்டை சேர்ந்த சுந்தரம் என்பவர் முகநூலில் தவறாக பதிவு செய்துள்ளார். அவரது பதிவு இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. எனவே நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மேலும் இது தொடர்பான புகார் மனு முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முகநூலில் அவதூறு பரப்பியதாக சுந்தரம் என்பவரை கைது செய்துள்ளனர்.