கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பேச்சம்பள்ளி வட்டம், வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவின் மகன் சுரேஷ் @ கான் சுரேஷ்(31) என்பவரை கடந்த 07.04.2024-ம் தேதி சாமல்பட்டி காவல் நிலைய சரகத்தில் சங்கிலி பறிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்து விசாரணை செய்ததில், இவர் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 குற்ற வழக்கிலும், தருமபுரி மாவட்டத்தில் 3 குற்ற வழக்கிலும், சேலம் மாவட்டத்தில் 2 குற்ற வழக்கிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 குற்ற வழக்கிலும் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்களின் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 28.05.2024-ம் தேதி மேற்கண்ட எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இன்று 28.05.2024 பேரிகை காவல் நிலைய சரகம், மாஸ்தி ரோடு ஜங்சன் பகுதியில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, சஞ்சீவனூர் கிராமத்தை சேர்ந்த 1) சிவா (28) த/பெ காந்தி, 2) அஸ்வின் (17) த/பெ குமார், ஆகியோர்கள் TN 11 V 0982 என்ற பதிவெண் கொண்ட Maruthi Swift காரில் பெங்களுரிலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கள்ளத்தனமாக கடத்தி வந்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,92,000/- மதிப்புள்ள சுமார் 370 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.