நாகர்கோவில் ஜூலை 29
குமரி மாவட்டம் திருவட்டாரம் அருகே அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி 1 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிழம்பியை அடுத்த கல்லங்குழி பகுதியைச் சேர்ந்த லியோ பிரவீன் – நிம்மி தம்பதியருக்கு கெவின் ஸ்மித் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக நிம்மி கணவரை பிரிந்து தன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். அவர் நாகர்கோவிலில் உள்ள ஐ டி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் குழந்தையை தாயார் மேபல் ரூபியிடம் விட்டுவிட்டு நிம்மி ஜோஷி வேலைக்கு சென்றார். குழந்தை வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டு இருந்தது. இந்நிலையில் சிறிது நேரமாக குழந்தையின் சத்தம் கேட்காததால் மேபல் ரூபி வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த தண்ணீர் பாதியளவு நிரம்பிய சில்வர் அண்டாவில், குழந்தை தலைகுப்புற விழுந்து கிடந் துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நிம்மி ஜோஷி திருவட்டார் போலீசில் புகார் அளித்தார்.இது குறித்து திருவட்டார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.