தக்கலை பிப் 12
திருவிதாங்கோடு பேரூராட்சி 9வது வார்டுக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் 15 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு பத்பநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் ஹாரூன் ரஷீத்,துனை தலைவர் சுல்பத் அமீர், மனித நேய மக்கள் கட்சியின்
9 வது வார்டு உறுப்பினர் ஷஹானா சுல்பி,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்தீக்,பேரூர் தமுமுக மமக தலைவர் செய்யது அலி,மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் சுல்பி ,மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள்,திமுக தொண்டர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்,பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.