அஞ்சுகிராமம் மே 25
குமரிமாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள ஜேம்ஸ்டவுணைச் சேர்ந்தவர் ஜாய்சிங் மகன் சாமுவேல் 38. இவருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. எஸ்தர் என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சாமுவேல் அஞ்சுராமத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அஞ்சுகிராமத்தில் உள்ள தனது செல்போன் கடைக்கு சென்று விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குசென்று கொண்டிருந்தார். அப்போது ஜேம்ஸ்டவுண் அருகே வரும் போது எதிர்பாரதவிதமாக சாலை அருகிலுள்ள மினி டிரான்ஸ்பார்மர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் தலையின் பின்பகுதி உட்பட பல இடங்களில் படுகாயம் அடைந்த சாமுவேல் அதே இடத்தில் இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த அஞ்சு கிராமம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் இது குறித்து எஸ்தர் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.