தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல்துறை இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டி தர்மபுரியில் நடைபெற்றது .போதைப்பொருள் மற்றும் கள்ள சாராயம்
அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் எதிரான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.இந்த தொடர் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் பரிசு சுபதா,இரண்டாம் பரிசு குமுதா, மூன்றாம் பரிசு கீர்த்திகா ஆண்கள் பிரிவில் முதல் பரிசு லோகேஷ் ,இரண்டாம் பரிசு அன்பரசு, மூன்றாம் பரிசு நவீன் குமார் வெற்றி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் தடகள அமைப்பு பிரசிடெண்ட் டி எஸ். சரவணன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மாவட்ட விளையாட்டு பிரிவு அமைப்பு செகரட்டரி அருவி ஆகியோர் கலந்து கொண்டனர்.