திருப்பத்தூர்:ஜூலை:21,
ஆம்பூரில் புவனம் நியூஸ் ஆசிரியர் மீது பொய் வழக்கு போட்ட ஆம்பூர் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் புவனம் நியூஸ் வெளியிட்ட விரைவு செய்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது கழிப்பிடம் சுத்தமாக இல்லை என செய்தி வெளியிட்டது
இதைத்தொடர்ந்து புவனம் நியூஸ் செய்தித்தாள் நிறுவனர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டது
பின் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கங்கள் பத்திரிக்கை நிறுவனர்கள் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாகவும் கண்டனங்கள் வட்டாட்சியர் மீது தெரிவித்தனர்
இதை அடுத்து ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே வட்டாட்சியர் தொடுத்த பொய் வழக்கு திரும்பப் பெற வேண்டும் என்று திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ந. வெங்கடேசன், தலைவர் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் முன்னிலை கோ. சரவணன், செயலாளர் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் வரவேற்புரை எஸ்.எம். புவனேஸ்வரன், ஆசிரியர் புவனம் நியூஸ் செய்தித்தாள்,
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநிலத் தலைவர் டி.எஸ். ஆர். சுபாஷ் பங்கேற்று கண்டனப் பேருரையில் இந்த செயலுக்கு வட்டாட்சியர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்த பொய் வழக்கு போட்ட காவல்துறைக்கு கண்டனத்தையும் தெரிவித்தார்
இதைத்தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் பொதுச்செயலாளர் யூ. வசந்த், வேலூர் மாவட்ட டி.யூ.ஜெ. கௌரவத் தலைவர் இரா. சி. தலீத் குமார், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். பிரபு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மாநில இணைச்செய்தி தொடர்பாளர் எஸ். முருகன், சேலம் மண்டல தலைவர் சி.நவநீத கிருஷ்ணன், மீரா டைம்ஸ் சுதா குமார், செய்தியாளர் ராமு, பவர் வாஹித், அபூபக்கர் சித்திக்,
இறுதியாக திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக துணைச் செயலாளர் அலாவுதீன், சங்க செய்தி தொடர்பாளர் தினேஷ் குமார் மற்றும் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜி. அஸ்லாம் நன்றியுரை ஆற்றினார் புவனம் செய்தித்தாள் சார்பாகவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.