நாகர்கோவில் – நவ- 12,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபியை படுகொலை செய்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்று பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெரோம் தலைமையில் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் .
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என ஆர்பாட்டத்தின் மூலம் கோரிக்கை வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தை சேர்ந்த இசக்கி முத்து விவசாயியான இவர் சொத்து சம்பந்தமான . வழக்கு பூதப்பாண்டி நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இந்த வழக்கை விவசாயி இசக்கிமுத்துக்காக வழங்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபி என்பவர் நடத்தி வந்தார் வழக்கை சரியாக நடத்தவில்லை என கோரி தன்னுடைய ஒரிஜினல் பத்திரங்களை கிறிஸ்டோபர் ஜோபியிடம் இசக்கிமுத்து திரும்ப கேட்டு கிடைக்காத அதிருப்தியில் இருந்த இசக்கிமுத்துவிடம் வாழை கன்றுகள் கேட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பதி சாரத்திற்கு வந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபியை தாக்கி தீ வைத்து எரித்து படுகொலை செய்து விட்டு ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் சரன் அடைந்த விவசாயி இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இக் கொலை சம்பவத்தில் தெர்புடைய மேலும் நான்கு பேரை மறு தினமே மீண்டும் இசக்கிமுத்துவின் நண்பர்கள், மற்றும் உறவினர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பத்தினை தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக பூதப்பாண்டி நீதி மன்ற வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுட்டனர் அதனை தொடர்ந்து நீதி மன்றம் முன்பு வழங்கறிஞர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர் வழக்கறிஞர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை இருந்து வருவதாகவும் . எனவே மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்தில்துணைத் தலைவர் சுப்ரமணிய ராஜன் செயலாளர் ஐயப்பன், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், பாபு, முருகன், சட்ட உதவி மையம் நடத்தி வரும் வழக்கறிஞர் பழனி கணபதி , மற்றும் முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் பழனி, பலவேசமுத்து, கென்னடி, மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.