கருங்கல், மார்- 5
கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று ஒரு விளையாட்டு பயிற்சிக்காக சென்று விட்டு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். கருங்கல் பகுதியில் வரும்போது பஸ்ஸில் இருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவி பஸ்ஸில் வைத்து திடீரென சத்தம் போட்டு உள்ளார்.
உடனடியாக பஸ் டிரைவர் பஸ்சை கருங்கல் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். உடனே மாணவி இறங்கி சென்று கருங்கல் காவல் நிலையத்தில் நடந்துவற்றை கூறி புகார் அளித்தார். மேலும் பஸ்ஸில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த நபரிடம் போலீசார் விசாரித்த போது தான் சில்மிஷத்தில் ஈடுபடவில்லை என்றும், தெரியாமல் நடந்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்து மாணவியின் உறவினர்களும் அந்த நபரின் உறவினர்களும் காவல் நிலையத்தில் குவிந்தனர்.
சம்பந்தப்பட்ட நபரின் உறவினர்கள் தெரியாமல் நடந்ததாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் மாணவி சிறுமியானதால் கருங்கல் போலீசார் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசில் அந்த மாணவியையும், அந்த நபரையும் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.