நாகர்கோவில் ஆக 9
நாகர்கோவில் கணேசபுரம் சந்திப்பு பகுதியில் உள்ளச் சாலையில் கழிவுநீர் ஓடை உடைப்பு ஏற்ப்பட்டதில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு
3 மாதங்கள் ஆகியும் சாலையில் உள்ள ராட்சத குண்டு
சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் அப்பள்ளத்தில் சிக்கிய சொகுசு காரால் வெளியே வர முடியாமல் அந்தரத்தில் தொங்கிது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் புலவர்விளை சந்திரசேகர் கூறும் போது
இந்த கார் மரண பள்ளத்தில் சிக்கி தொங்கிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது அனாதை மடத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மரண கிணற்றில் கார் சாகசம் செய்யும் காட்சியை ஒரு ரூபாய் செலவில்லாமல் நாகர்கோவில் மாநகராட்சி முற்றிலும் இலவசமாக காண்பித்து விட்டதாக தெரிவித்த அவர் இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சி பொது மக்களை மகிழ்விக்க எல்லா இடங்களிலும் தங்களுடைய( சாதனைகளை) சாகசத்தை இதுபோல் காண்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதுடன்
இதுதான் மாநகராட்சியின் வளர்ச்சி பணியா? எனவும் கேள்வி எழுப்பினார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பார்த்தாஸ் ஜவுளி கடை எதிர்புரம் நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாகும் இது
வாகனங்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலையும் கூட
இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சாலை ஓரமாக கழிவு நீர் ஓடை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது. சாலை ஓரம் உடைப்பு ஏற்ப்பட்டு சாலை குறுகிய அளவில் உள்ளதால் வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்லும் பொதுமக்கள் செல்வதற்க்கு மிகவும் சிரமமாக உள்ளது .
மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது மாநகரில் முக்கியமான பகுதியாகும். ஆனால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய
வரி கட்டணங்களை வசூல் செய்ய வாகனங்கள் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம் வரி கட்டவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கிறது. தற்போது மாநகராட்சியின் அலட்சியத்தால் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இது முற்றிலும் மாநகராட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்டதே ஆகும். இந்த விபத்துக்கு மாநகராட்சி பொறுப்பு இருக்குமா? இந்த அதால பாதாளத்தில் சிக்கிய சொகுசு காரை மீட்டு அந்தக் காரை பழைய நிலைக்கு கொண்டு வர பல ஆயிரங்கள் செலவாகும் அந்தச் செலவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுமா? இந்த விபத்தால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது நல்ல விஷயம், உயிர் சேதம் ஏற்பட்டால் தான் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் தற்போதைய மாநகராட்சி நிர்வாகத்திற்கு நிர்வாக திறமை குறைவு என்பதை நிரூபிக்கும் செயலாக அமைந்து விடும் எனவே பொதுமக்களின் உயிருடன் விளையாடுவதை மாநகராட்சி நிர்வாகம் விட்டு விட்டு குறைந்தபட்சம் பொதுமக்களிடமிருந்து வரியாக வசூல் செய்யும் பணத்தை பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு இது போன்ற ராட்சத பள்ளங்களை உடனடியாக செப்பனிட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்