ஈரோடு நவ.15
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, இரும்புபாலம் பகுதியை சேர்ந்த கோமதி தாமோதரன் தம்பதியினருக்கு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 27 வாரங்களே ஆன குறைமாத மிகவும் எடைகுறைவான இரட்டை பெண் குழந்தைகள் (முதல் குழந்தை 940 கிராம் மற்றும் இரண்டாம் குழந்தை 680 கிராம்) எடையில் பிறந்த்து. பிறந்த நாள் முதலே இரு குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் கோளாறு இருந்ததன் காரணமாக, அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாட்கள் கழித்து தம்பதியினரின் விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனையிலிருந்து ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயர்தர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சையின் காரணமாக இரு குழந்தைகளின் உடல்நிலை சீராகி, நல்ல முன்னேற்றம் கண்டு, உடல் எடை அதிகரித்துள்ளது. தற்போது இரு குழந்தைகளின் எடை முதல் குழந்தை 1.70 கிலோ மற்றும் இரண்டாம் குழந்தை -1.050 கிலோ ஆகும். தாயும், இரு பெண் குழந்தைகளும் 69 நாட்கள் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் நலமுடன்
மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்னர்.
தனது குழந்தைகள் பூரணமாக குணமடைந்ததால் மகிழ்ச்சி அடைந்த இரட்டை குழந்தைகளின் தாயார் கோமதி கூறும் போது
என் பெயர் கோமதி. நான் நாமக்கல் மாவட்டம் இரும்புபாலம் பகுதியில்
வசித்து வருகிறேன். நான் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்
மகப்பேறு சிகிச்சை பெற்று வந்தேன். இந்நிலையில்
எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. குறைமாதத்தில் பிறந்த
காரணத்தால் குழந்தைகள் மிகவும் எடை குறைவாகவும் மற்றும் மூச்சுத்திணறல்
கோளாறும் இருந்தது. 2 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில் போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து
அனுமதிக்கப்பட்டு நல்ல முறையில் சிகிச்சை அளித்தார்கள்.
குழந்தைகளுக்கு படிப்படியாக மூச்சுத்திணறல் குறைந்து நல்ல முன்னேற்றம்
காணப்பட்டது. தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பான
சிகிச்சையின் மூலம் குழந்தைகளின் எடையை உயர்த்தி என்னிடம் எனது
குழந்தைகளை மீட்டு தந்துள்ளார்கள்.
இத்தகைய சேவையினை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ள முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.