திருப்பூர்பிப்:25 தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 46-வது வார்டு மற்றும் 47-வது வார்டு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்திட சட்டமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியால், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 46-வது வார்டு, ஜெய் நகர் முதல் பள்ளக்காட்டுபுதூர் வரையிலும், 47-வது வார்டு விஜயாபுரம் குட்டை முதல் காங்கேயம் ரோடு மீன் பண்ணை வரையிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்
ரூ.04.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டவுள்ள மழைநீர் வடிகால் பணிகளை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் M.L.A அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்..
இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் T.K.T மு.நாகராசன், பகுதி செயலாளர் மேங்கோ பழனிசாமி, மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, வட்டக் கழக செயலாளர் வெங்கட்ராஜா, மாவட்ட துணை செயலாளர் நந்தினி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா பூபதி, மாநகராட்சி உதவி ஆணையர் வினோத், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..