மயிலாடுதுறையில் பாஜக சார்பில் சமகல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் சமகல்வி பாதையை நோக்கி தமிழகம் செல்ல மும்மொழிக் கல்வி கொள்கையை ஏற்க வேண்டும் என்ற நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர்கள் பண்ணை வயல் இளங்கோவன், சி.எஸ். கண்ணன், கோவி. சேதுராமன் சித்ரா முத்துக்குமார், கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இதில் புதிய கல்விக் கொள்கையினால் விளையும் நன்மைகள் குறித்தும், பல்வேறு நிர்வாகிகள் பேசினர். மும்மொழி கல்விக் கொள்கையால் தமிழ் ஆங்கிலத்தோடு கூடுதலாக ஒரு மொழியை மாணவர்கள் கற்கும் வாய்ப்பு, உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழி வகை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி தமிழில் பயில்வது கட்டாயம், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு, மும்மொழி கல்விக் கொள்கையால் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கல்வி ஏழைகளின் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு திரட்டி கையெழுத்து இயக்கம் நடத்துவதாக பாஜகவினர் தெரிவித்தனர். இதில்
மாவட்ட துணை தலைவர் மோடிகண்ணண்,நகரத்தஷைவர் ராஜகோபால்,இளைஞரணி பாரதி கண்ணண், முன்னாள் நகரத்தலைவர் வினோத் உட்பட பலர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது கையெழுத்து வாங்கினார்.
ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.