கன்னியாகுமரி மே 23
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் கராத்தே உலக சாதனை குஷாங்கு ஷிடோ ரியு கராத்தே டு இந்தியாவை சார்ந்த மாஸ்டர் சென்சாய் ராஜு தலைமையில் ஆசிரியர் மற்றும் மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பமானது. சிறப்பு அழைப்பார்கள் கராத்தே பயிற்சியாளர்கள் பெற்றோர் இணைந்து குத்து விளக்கு ஏற்றினர்.
7 வயது முதல் 42 வயது வரையிலான 106 மாணவ மாணவியர் கலந்து கொண்டு கராத்தே உலக சாதனை முயற்சியாக 27 வகையான கட்டா 1 மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ந்து இடைவிடாமல் செய்தனர். இந்த மாபெரும் உலக சாதனை முயற்சியை உலக சாதனை அமைப்பினர் நேரில் பார்வையிட்டு ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஜேக்கப் ஞானசெல்வன் சிஇஓ எஸ்தர் ஆகியோர் இணைந்து உலக சாதனையாக அறிவித்து ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்தாக அறிவித்தனர்.
தொடர்ந்து மாணவ மாணவியர் இணைந்து சிலம்பம்,எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ளும் முறை (கராத்தே டெக்னிக்) , ஒருவரை படுக்க வைத்து 70 கிலோ எடையுள்ள கருங் கல்லை அவரது வயிற்றின் மேல் வைத்து சுத்தியலால் உடைத்தது,பிரமிடு, வர்ம அடி முறைகள் போன்றவற்றைைை டெமோவாக மேடையில் நிகழ்த்தி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.
பின்னர் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேரருட் தந்தை.ஜோஸ் முட்டத்துப்பாடம், அருட்தந்தை.ஜோமி கமுகமற்றத்தில் அருட்சகோதரி. மெரினா ஜேக்கப், சிகான் டி.கே.பொன்னன் கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயராஜ்,அருட் சகோதரி.மேரி ஆக்னஸ்,காவல் ஆய்வாளர் ரமேஷ் மோகன்,கலை இளமணி உலக சாதனையாளர் தீரஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
உலக சாதனையாளர் அனைவருக்கும் உலக சாதனை சான்றிதழ்,கேடயம், மெடல் வழங்கி சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்தனர். ஆசிரியை ஷீமா வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியை பிரவீனா அனைவருக்கும் நன்றி பாராட்டினார். நிகழ்ச்சியை கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் தொகுத்து வழங்கினார். செவிலியர் பிறிஜி மேரி தலைமையில் முதலுதவி குழு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்திய மாஸ்டர் சென்சாய் ராஜு வுக்கு உலக சாதனை சான்றிதழ் கேடயம் கோப்பை மெடல் அணிவித்து ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மற்றும் சி இ ஒ ஆகியோர் இணைந்து கௌரவித்தனர். நிகழ்வில் கராத்தே பயிலும் மாணவ மாணவியர் மாணவ மாணவியரின் பெற்றோர் ஊர் பொதுமக்கள் கேரள மாநிலம் மற்றும் திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உள்ள மாஸ்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.