நாகர்கோவில் ஜூன் 17
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் பக்ரீத் பண்டிகையை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரஃப் பள்ளி வாசலில் கொண்டாடினர். பள்ளிவாசலில் கூட்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இஸ்லாத்தின் 5 வது கடமையான ஹஜ்ஜை மையப்படுத்தி ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்,போது பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுவே இஸ்லாமிய மக்களின் முக்கிய கடமைகள் ஆகும். துல் ஹஜ் மாதம் பிறை 10 ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்போது இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள். அந்த வகையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில்,அரபு நாட்டில் பிறை தெரிந்ததை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரஃப் பள்ளி வாசலில் உள்ள முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர் இதனை ஒட்டி நேற்று காலை சிறப்பு தொழுகைகள் நடந்தது இதில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகை ஒட்டி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.