கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையும், கையாளாகாத விடியா திமுக அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பிப். 13. தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து அப்பள்ளியில் பயின்று வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை கண்டித்தும், கையாலாகாத விடியா தி.மு.க அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் போச்சம்பள்ளி தாலுகா ஆபிஸ் எதிரே நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் கே ஆர்.சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் அப்பா பிள்ளை வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட கழக அவை தலைவர் முருகன், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, முன்னிலை வகித்தனர். கழக அவைத்தலைவர் டாக்டர் வி.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது மது மற்றும் போதையினால் தமிழகம் தள்ளாடுவதாகவும், அதை தடுக்க வேண்டிய ஆளுங்கட்சி, போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பது பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாகவும், தெரிவித்தார். ஆகவே இந்த ஆளும் திமுக அரசை அப்புறப்படுத்த வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் லட்சுமணன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.வேலு, பலராமன், சதீஷ், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு, பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி .கோவிந்தராஜ், மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், நாகார்ஜுனல்லி பேரூராட்சி செயலாளர் கே.எஸ்.கோவிந்தராஜ், பர்கூர் பேரூராட்சி செயலாளர் மகேஷ், ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளர் துரை, விவசாய அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ், வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த், உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக போச்சம்பள்ளி ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திரன் நன்றி உரையாற்றினார்.