அருமனை, ஜன- 29
கடையாலுமூடு அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நகை கடையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை தனது மனைவியுடன் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இரவு வேலைக்கு சென்றவர் அடுத்தநாள் காலையில் வீடு வந்துள்ளார்.
மதியம் வீட்டின் சமையலறைக்கு சென்ற போது பின்பக்க கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. அப்போது வீட்டு பீரோவில் இருந்த பணம் மற்றும் 13 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் போன்றவற்றை காணவில்லை. இது குறித்து கடையாலுமூடு போலீசில் ராமகிருஷ்ணன் புகார் செய்தார்.
நேற்று 27-ம் தேதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதை அடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை ஆய்வு செய்தனர். திருடர்கள் வீட்டிலிருந்து மது அருந்திவிட்டு திருடியது தெரிய வந்தது. போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.