நாகர்கோவில் பிப் 5
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொற்றிகோடு காவல் நிலைய போலீசார் சித்திரங்கோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எந்தவித அனுமதியுமின்றி அதிக பாரத்துடன் சட்டவிரோதமாக கனிமவளம் ஏற்றி வந்த ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அரசுவிளை பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஜேப்பியர் (47), கண்ணனூர் பகுதியை சேர்ந்த வாகன உரிமையாளர் தங்கலசி மற்றும் குவாரி உரிமையாளர் மீது கொற்றிகோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.