கல்வித் தந்தை சுவார்ட்ஸ் அவர்களின் 298 வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இராமநாதபுரம் வருவாய் கோட்ட ஆட்சியர் ராஜமனோகரன்
தலைமை வகித்தார்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய அதிகாரி டாக்டர் மனோஜ் குமார், அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு நிறுவனர் ஆசிர் ஆபிரஹாம் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி தொடங்கி வைத்தார். ரத்ததானம் முகாமில் 25 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்தனர்.