பொள்ளாச்சி அக்:22
பொள்ளாச்சியில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கோவை சாலையில் அமைந்துள்ள சக்தி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு.இக்பால் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர்.சி. அர்ஷத் முபின் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பொள்ளாச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் இரா.சக்திவேல் ஆகியோர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாற்று மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு மளிகை பொருட்களும் தலைக்கவசமும் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சிறப்பாக தொண்டு செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு சிறந்த சமூக சேவை விருதினை பொன்னாடை போற்றி வழங்கி கௌரவித்தனர் இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பொள்ளாச்சி பஞ்சலிங்கம், கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் R.ஜெயபிரகாஷ் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் K.ராஜா (எ) சிவலிங்கம், மாநில இளைஞரணி தலைவர் N.ரிஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வாழ்த்துரை வழங்க 26 ஆவது நகர மன்ற உறுப்பினர் M.Kசாந்தலிங்கம் 20,வது வார்டு நகர மன்ற உறுப்பினர் S.பாலமுருகன்,15 வது நகர மன்ற உறுப்பினர் MAV.துரை பாய், முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன், கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம், திறமை மாற்றுத்திறனாளிகள் வழிகாட்டி அமைப்பின் தலைவர் முஜிபுர் ரஹ்மான், ஆட்டோ ஓட்டுனர் சம்மேலனம் மாநில தலைவர் கு. வெங்கடாசலம், லயன்ஸ் கிளப் எக்ஸலண்ட் கனகராஜன், மனோன்மணி, பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் S.செல்வமணிகண்டன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜன், மூத்த பத்திரிகையாளர் ஜீவா, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் K.ராஜசேகர், பொள்ளாச்சி சதுரங்க சங்க தலைவர் G.கருணாநிதி, செயலாளர் N.பரமேஸ்வரன், தென் செங்கம் பாளையம் ஊராட்சி தலைவர் S.அண்ணாதுரை, கம்பன் கலை மன்றம் தலைவர் K.M.சண்முகம், திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர் சுரேஷ், கள்ளிக்கோட்டை ஆசிரியர் பயிற்சி மையம் பேராசிரியர் V.கண்டிமுத்து, தாய் அன்பாலயம் குழந்தைகள் காப்பகம் நிறுவனர் செல்வக்குமரன், திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் சுறா, பள்ளிபாபா நினைவு அறக்கட்டளை தலைவர் முபாரக் ஆகியோரும், விழா ஒருங்கிணைப்பு மாநில பொறுப்பாளர் ச.காளிமுத்து, இணை இயக்குனர் தென்னிந்திய திரைப்பட துறை சிறிநான் மணிகண்டன் மற்றும் அறக்கட்டளையின் மாநில துணைத் தலைவர் பொறியாளர் சையது ரியாஸ் கான், மதுரை மாவட்ட தலைவர் R.சூரிய நாராயணன் S.ரவி, R.செந்தில் M.செந்தில்குமார் M.R.அப்பாஸ் P.மூர்த்தி B.வினோத்குமார் P.மனோஜ் குமார் U.M.கார்த்திகேயன் S.பாலமுருகன் ஜெய் கிஷோர் மற்றும் எம்எல்ஏ என்ற அறக்கட்டளை கண்ணன் மற்றும் அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் R.தினேஷ் பாபு அவர்கள் நன்றி உரையாற்றி கூறினார் இந்நிகழ்வில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்