கோவை நவ:27
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் சிறப்பு ஏற்பாட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமில் திரளான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள்.
மேலும் இரத்ததானம் செய்தவர்களுக்கு ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் ஜூஸ் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக துணை முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கழக கொடி ஏற்றி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் நகரவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவியருக்கு பொதுத்தேர்விற்கான வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உடன் முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ஆர்.ராமச்சந்திரன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரின் தனி உதவியாளர் ரோச் தனசாமி, மேட்டுப்பாளையம் நகர தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், நகர் செயலாளர்கள் மேட்டுப்பாளையம் முனுசாமி, முகமது யூனிஸ், காரமடை வெங்கடேஷ், கூடலூர் அறிவரசு, பேரூர் கழக செயலாளர்கள் சிறுமுகை உதயகுமார், வீரபாண்டி சுரேஷ், வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி அமைப்பாளர் ஹக்கீம், துணை அமைப்பாளர் விக்னேஷ்குமார், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் மனோகரன், மீனவரணி அமைப்பாளர் ராம் குட்டி, துணை அமைப்பாளர் பாபு, நெசவாளரணி அமைப்பாளர் நடராஜன், து.தலைவர் கணேஷ் மூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் ரதி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜேந்திரன், சிறுபான்மையர் அணி து.தலைவர் அலெக்ஸ், வர்த்தக அணி பத்மநாபன், விளையாட்டு மேம்பாட்டு துறை அணி சரவணகுமார், பொறியாளர் அணி திலீப் என திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.