செங்கல்பட்டு மாவட்டம்
ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி கார்த்திக் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா கார்த்திக் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் உதவி தலைமையாசிரியர் மு.மதுரைவீரன் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் க.கனகராஜ் தலைமை உரையாற்றி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி விழா பேருரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் துணை பெருந்தலைவர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்வில் ஊரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கண்ணன் தினேஷ் தமிழ்செல்வம் மலைராஜா மற்றும் 13 வது வார்டு உறுப்பினர் பெரோஸ் காந்தி உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.