பரமக்குடி,அக்.15 : மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையின் பரமக்குடி நகர் பகுதிக்குள் பிரியும் சாலையின் உள்பகுதி கனமழையால் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு. உடனடியாக சீரமைப்பு பணி செய்து, போக்குவரத்தை சரி செய்த பரமக்குடி எம்எல்ஏ முருகேசன்.
ராமநாதபுரம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பரமக்குடி நகருக்குள் வரும் பிரிவு சாலையின் பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் சிறிய மழையிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பரமக்குடி பகுதியில் பெய்து வரும் கனமழையால் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையின் பரமக்குடி நகர் பகுதிக்குள் செல்லும் பிரிவு சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சிறிய ரக வாகனங்கள் பள்ளத்தில் பதிந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது இதனை அறிந்த பரமக்குடியை எம்எல்ஏ முருகேசன் உடனடியாக தனது சொந்த செலவில் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றப்பட்டு,
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை ஜல்லி மற்றும் கற்களை கொண்டு சரி செய்யும் பணி பணியினை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும், பள்ளம் ஏற்படாத வகையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பட விளக்கம்
அரியனேந்தல் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி பிரிவு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்ட எம்எல்ஏ முருகேசன்.