நாகர்கோவில் ஜூன் 25
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்தவர் கிளாடிஸ் அனுஷா. இவர் இனையம் புத்தன் துறை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். கிளாடிஸ் அனுஷா தினசரி மருத்துவமனைக்கு வேலைக்காக அரசு பேருந்தில் கடந்த 5 ஆண்டுகளாக சென்று வருகிறார்.பேருந்தில் பயணம் செய்யும் போது கருங்கல் பாலூரை சேர்ந்த சீதா என்பவருடன் அறிமுகம் ஆகி உள்ளார். சீதா சத்துணவு கூட்டத்தில் வேலை பார்ப்பதாக கூறி இவருடன் பழகி வந்துள்ளார்.இந்த நிலையில் கிளாடிஸ் அனுஷாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சில நாட்களாக கவலையுடன் சென்றுள்ளார்.அப்போது சீதா உனக்கு ஏற்கனவே இருந்த முன்னாள் காதலன் மாந்திரீகம் செய்து வைத்துள்ளார் எனவே எனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதியிடம் கூறி உயிர் பலிகள் கொடுத்து உன்னை காப்பாற்றுகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக 3.45 லட்ச ரூபாயை சீதா வாங்கியுள்ளார்.மேலும் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அதற்க்கு மீண்டும் நரபலி கொடுக்க வேண்டும் என கூறி சீதா கிளாடிஸ் அனுஷாவிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.ஆனால் கிளாடிஸ் அனுஷா இனிமேல் பணம் இல்லை என கூறியதுடன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.மேலும் சீதா அங்கன்வாடியில் பணிபுரியவில்லை என்பதும் கிளாடிஸ் அனுஷாவிற்கு தெரிய வந்தது.இந்த நிலையில் கிளாடிஸ் அனுஷா நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.தன்னிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்ட சீதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதங்கோடு பகுதியை சேர்ந்த சசி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியுள்ளார் மேலும் தன்னை ஏமாற்றி பெற்ற பணத்தையும், நகைகளையும் மீட்டுத் தரும்படியும், இந்த மாந்திரீக கும்பல் நமது மாவட்டத்தில் இனிமேல் யாரையும் ஏமாற்றாத வண்ணம் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.