மார்த்தாண்டம் டிச. 31-
குழித்துறை நகராட்சி சார்பில் கீழ் பக்கத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிப்பதற்காக பிரம்மாண்டமான ஷெட் அமைக்கப்பட்டுள்ளது மக்காத குப்பை அரியலூர் சிமெண்ட் பேக்டரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது
நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி வாகனத்தில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் மார்த்தாண்டம் ஜங்ஷனில் உள்ள நான்கு கடைகள் குப்பைகளை ரோட்டில் வீசியது தெரிய வந்தது
இதனைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ்குமார் முன்னிலையில் நான்கு கடைகளுக்கு ரூபாய் 4500 அபராதம் விதிக்கப்பட்டது