இரணியல், நவ- 30
இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (61). விவசாயியான இவர் எஸ் பிளஸ் பவர் ஸ்டில்லர் நிலம் உழும் வாகனம் வைத்து நிலங்களை உழும் உழவுத்தொழில் செய்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி வேலை முடிந்து இரவு உழவு வாகனத்தை பாறையடி அருகில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலையில் உழவு வாகனம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து அவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் உழவு வாகனத்தை தீ வைத்து எரித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
விசரணையில் அந்த பகுதியில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலர் அவரது உழவு இயந்திரத்தை தீ வைத்துக் கொழுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே விவசாயி பால்ராஜ் – ஐ நேற்று முன்தினம் (27-ம் தேதி) காலை சுமார் 7.30 மணியளவில் மர்ம நபர் அவரது தலையில் தாக்கியுள்ளனர். உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பால்ராஜ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் சம்பந்தமாகவும் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.