திங்கள் சந்தை, பிப்- 8
திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் இருந்து தினம் ஏராளமான பஸ்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில் யாசகம் கேட்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளிச்சந்தை வழியாக நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நிற்கும் வழித்தட டிராக்கில் வந்த போது திடீரென முதியவர் மயங்கி விழுந்தார். இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
பிச்சை கேட்கும் இவர்கள் மாலை ஆனால் மது போதையில் இருப்பதாக பல பயணிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். போதையில் விழுந்ததால் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய பாஸ்கள் சிரமத்திற்கு இடையில் சென்று வந்தன.
. இதனிடையே தகவல் அறிந்து வந்த திங்கள் நகர் பேரூராட்சி ஊழியர்கள் அவரை எழுப்பி பரிசோதித்தனர். அப்போது அவர் அதிக மது போதையில் இருந்து உறுதியானது. இதை அடுத்தது அவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.