நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வாடகை கொடுப்பதில் மூன்று நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஸ்டான்லி வயது 38 என்பவர் கோத்தகிரியில் உள்ள பிரபு என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி கூலி வேலை செய்து வந்த நிலையில் கோத்தகிரியை சேர்ந்த தேவதாஸ் நிவாஸ் ஆகியோர் நண்பர்களாகி அதே வீட்டில் தங்கி ரூபாய் 5000 வாடகை பேசி ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வாடகை கொடுப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தேவதாசும் நிவாஸும் ஸ்டான்லியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். கோபமடைந்த ஸ்டான்லி தேவதாஸ் நிவாஸ் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் ஆத்திரமடைந்த தேவதாஸ் நிவாஸ் ஆகிய இருவரும் ஸ்டான்லி ராயன் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்வதாக மிரட்டி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்டான்லி கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் அறிந்த போலீஸ் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் உதவி ஆய்வாளர் வணக்குமார் இருவரும் சென்று கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட தேவதாஸ் நிவாஸ் இருவரையும் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.