நாகர்கோவில் டிச 24
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே குடில் அமைப்பது வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது என கிறிஸ்தவர்கள் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் . அதிலும் கிறிஸ்துமஸ் குடில்களை பொருட்களால் அமைப்பதுடன் களிமண் மற்றும் பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட சொரூபங்களை குடிலில் வைப்பது வழக்கம். ஆனால் இவற்றிற்கு எல்லாம் மேலாக வித்தியாசமான முறையில் நாகர்கோவிலில் வீட்டில் குடில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 7 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் விஜிலா ஜெயசிங். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் விதத்தில் பிரம்மாண்ட குடில் ஒன்றை அமைத்துள்ளார். இந்த குடில் முற்றிலும் நூலால் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஊட்டியில் இருந்து பிரத்தேகமான நூல்களை வாங்கி கடந்த ஆறு மாத காலமாக இதனை செய்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் சொரூபம், ராஜாக்கள், ஆடு,ஒட்டகம் உள்ளிட்டவத்தை தத்ரூபமாக நூலால் செய்துள்ளார். மேலும் அவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரித்து வீட்டில் பார்வைக்காக வைத்துள்ளார். புற்களால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலை பார்த்தவர்களுக்கு நூலால் செய்யப்பட்ட குடில் மிக வித்தியாசமாக இருந்தது. தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையே இதற்காக நேரம் ஒதுக்கி அனைவரின் கவனத்தையும் ஏற்கும் வகையில் அமைத்த இந்த நூல் குடிலை ஏராளமானோர் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.