திண்டுக்கல் ஜுன் :13
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் சார்பாக புளியமரத்து கோட்டை ஊராட்சி மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட எந்த குழந்தையும் தொழிலாளராக உருவாகாமல் இருப்பதற்காக ஊராட்சி ஒன்றியம் மற்றும் அமைதி அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களிடையே தொழிலாளர் இளம் தொழிலாளர் முறை பாதிப்பு குறித்தும் இளம் தொழிலாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கான வழிவகைகள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு. அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தார்கள்.புவனேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். அமைதி அறக்கட்டளையின் மேலாளர் ஆ சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பவித்ரா, திவ்யா, மணி மேகலை ரேணுகா தேவி ஆகியோர்களின் கருத்துரையிலும் கூட்டத்தினை பணியாளர்கள் ராஜேஸ்வரி ஒருங்கிணைப்பு செய்தார்கள். கூட்டத்தில் மாணவர்கள் நாங்கள் குழந்தை தொழிலாளராக உருவாக மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியில் முடிவில் சங்கீதா நன்றி கூறினார்.