ஆயாள்பட்டியில் மயானத்தில் ரூ 11 லட்சம் மதிப்பீட்டில் எரிமேடை அமைக்கும் பணி ராஜா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் /
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் உள்ள ஆயாள்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் எலி மேடை, காத்திருப்போர் அறை ஆகியன அமைத்து தர வேண்டும் என்பது சுமார் 20 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் ராஜா எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அவர்களின் ஒதுக்கையை ஏற்றுக் கொண்ட ஏற்று 2023-24 சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் பதினோரு லட்சம் மதிப்பீட்டில் எரி மேடை, காத்திருப்போர் அறை அமைக்க ராஜா எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டார். நிலையில் இந்நிலையில் இந்த பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரியதுரை* தலைமை வகித்தார். இதில்
தென்காசி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு நாயக்கர், சங்கரன்கோவில் நகரசெயலாளர் பிரகாஷ், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன்,செந்தூர்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கணேசன், கீழநீலிதநல்லூர் கிளைசெயலாளர் நாகராஜன், அய்யாசாமி, சௌந்தர்ராஜன், வெள்ளத்துரை, சுப்ரமணியன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பழனிவேல்முருகன், அரசு ஒப்பந்தகாரர் மரியலூயிஸ் பாண்டியன் மற்றும் கழகத்தினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த பணிகள் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்ட ராஜா எம்எல்ஏவுக்கு பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.