நாகர்கோவில், மே – 21,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எடுத்த புத்தேரி கலைவாணர் நகரில் பூதலிங்கம் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி திறந்த நிலையில் இருந்ததால் மேச்சலுக்கு சென்ற பசுமாடு கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டினை பத்திரமாக மீட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டினை விரைவாக மீட்ட தீயணைப்பு படை வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் மனதார பாராட்டினர்.