மார்த்தாண்டம், பிப்-5
மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜன் (42). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் விஜின் (32), பிரபின் (27), மற்றும் விஜயகுமார் (60). இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் சிவராஜன் மூன்று பேருக்கு எதிராக சாட்சி கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் சிவராஜன் அதே பகுதியில் நடந்த சென்று கொண்டிருந்தபோது, அவரை விஜின், பிரபின், விஜயகுமார் ஆகியோர் வழிமறித்து பின்னர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்னர் சிவராஜனை அடித்து கீழே தள்ளி, காலால் எட்டி உதைத்தார்களாம் இது தொடர்பாக சிவராஜன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.