நாகர்கோவில் செப் 8
கன்னியாகுமரி காங்கிரஸ் சிறுபாண்மை துறை
சார்பில், புதிய நிர்வாகள் தேர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள விஜய்வசந்த் எம்பி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறுபாண்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரிப் தலைமை வகித்து புதிய நிர்வாகிக ளிடம் நேர்காணல் நடத்தினார்.
நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினு லால்சிங்,
காங்கிரஸ் கிழக்கு
மாவட்ட அமைப்பு செயலாளர் சுபுஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராஜேஷ்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-
காங்கிரஸில் இருக்கும் அனைத்து இணை அமைப்புகளும் தாய் அமைப்போடு இணைந்து செயல்பட வேண்டும். மக்களின் பாதுகாப்புக்காக தலைவர் ராகுல்காந்தி 24 மணி நேரமும்
உழைத்து கொண்டு இருக்கிறார். கட்சி வலுவாக இருந்தால் தான் நாம் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையோடு பணி யாற்றவேண்டும் என்றார்.
கூட்டத்தில் சிறு பாண்மை பிரிவு மாநில முதன்மை செயலாளர் நாகூர் கனி, மாநகராட்சி மண்டல தலைவர் செல்வ குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ்,
இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட
தலைவர் டைசன், மாநில பொதுகுழு உறுப்பினர் யூசுப்கான், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா, கவுன்சிலர் அனுஷாபிரைட், ரஜினி செல்வம் உள்பட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.