திருப்பத்தூர் பணிமனைக்கு உட்பட்ட 13-பி நகரப்பேருந்து திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை தினமும் இயக்கப்படுகிறது. பல்வேறு சிறு கிராமங்களின வழியாக சென்று வரும் நகரப்பேருந்து என்பதால் இப்பேருந்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் இப்பேருந்தில் பயணிக்கின்றனர். இன்று காலை போச்சம்பள்ளி வந்த பேருந்தின் பின் படிகட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தடைந்தது. பயணிகள் பலர் படிகட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு இறங்கினர். ஆபத்தான முறையில் உள்ள படிக்கட்டு ஒரு வார காலமாக இதே நிலையில் இருப்பதாகவும், இதனை சீர்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆபத்தான முறையில் தொடர்ந்து ஒரு வார காலமாக பயணித்து வருவதாக பயணி ஒருவர் வேதனை தெரிவித்தார். செய்தி எடுப்பதை அறிந்த நடத்துனர் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளை இறக்கவிட்டு, காலியாக பேருந்தை எடுத்து சென்றனர்.
இதகுறித்து திருப்பத்தூர் பணிமனை கிளை மேலாளர் அவர்களிடம் கேட்டபோது, பேருந்து நடத்துனர் படிகட்டு உடைந்திருப்பதை செய்தியாளர்கள் செய்தி எடுப்பதை தெரிவித்தார், இதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு வரச்சொல்லி உத்தரவிட்டேன். படிகட்டு உடைந்திருக்கும் விஷயம் எனக்கு தெரியாது. உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.