லிட்டில் ஸ்டார் என்ற தலைப்பில் குழந்தை தினவிழா ;- தூத்துக்குடி சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை சார்பில், ‘லிட்டில் ஸ்டார்’ என்ற தலைப்பில், குழந்தைகள் தின விழா போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இயற்கை காட்சி’ ‘சுற்றுச்சுழல் மாசுபாடு விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, ‘தூத்துக்குடியின் சிறப்பு அம்சம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி நடந்தது.
காலை பேஷன் ஷோ, மதியம் கிளாசிக்கல், வெஸ்டர்ன் நடன போட்டிகள் நடந்தன.
இதனையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி, பாராட்டி பேசினார்.
வெற்றி பெற்றவர்கள் விபரம்:
ஓவியப் போட்டியில் முதல் பரிசு மது லத்திகா, இரண்டாம் பரிசு கெனிஷா, 3-ம் பரிசு மகிதா ஸ்ரீ , 10 வயதிற்கு மேல் முதல் பரிசு குரு செல்வி, இரண்டாம் பரிசு நர்மதா தேவி, 3ம் பரிசு ஸ்ரீ மகா ராஜேஸ்வரி பெற்றனர். பேச்சு போட்டியில் முதல் பரிசு தமிழ் குமரன், 2ம் பரிசு மொகமது ஆதில், 3ம் பரிசு எழில் கார்த்திகா, மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு கைஸர் தமீம், 2ம் பரிசு மித்ரன், 3ம் பரிசு ஜெகதீஸ்வரன் பெற்றனர். பேஷன் ஷோ போட்டியில் முதல் பரிசு ஜெய் ஷிவானி, 2ம் பரிசு மோனிஷா, 3ம் பரிசு மாட்ஷியா , கிளாசிக்கல் நடனம் முதல் பரிசு ரம்யா லட்சுமி, 2ம் பரிசு மஹானி, 3ம் பரிசு வேத ஸ்ருதி வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சென்னை சில்க்ஸ் துணை மேலாளர் ரமேஷ்குமார், விளம்பர பிரிவு மேலாளர் மகேந்திரன், தூத்துக்குடி கிளை மேலாளர்கள் மற்றும்
ஏராளமான பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.