கலசலிங்கம் பல்கலை க்கழகம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில்
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்நோயாளிகள் அமர்வதற்காக கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் 1000 சேர்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பேரா. டாக்டர்.டி. ஜெயசிங் வரவேற்புரை ஆற்றினார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் பேரா டாக்டர் சி. அனிதா மோகன், ரெசிடென்ஷியல் மருத்துவ அலுவலர் டாக்டர் டி. கணேசன், துணை சூப்பிரென்டென்ட் டாக்டர் என். அன்புவேல், உதவி ரெசிடென்ஷியல் மருத்துவ அலுவலர் டாக்டர் சுல்தான் முகமது இப்ராஹிம், உதவி ரெசிடென்ஷியல் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ. வெங்கடேஷ் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை விருந்தினர்களாக கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை தலைவரும் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமியின் வேந்தருமான முனைவர் க. ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி அவர்களும் கலந்துகொண்டனர். மெடிக்கல் சூப்பிரென்டென்ட் அதிகாரி டாக்டர் என். அரவிந்த் பாபு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். என். வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.