சென்னை, டிச- 03 , சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் பல்லேடியம் மாலில் கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம் அமைக்கும் விழாவில் நடிகை ஸ்ருதி ஹாசன் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் மரத்தை ஒளிரச் செய்தார் ,
அப்போது ஸ்ருதி ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
அன்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் சின்னமாக உயர்ந்து நிற்கும் கண்கவர் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை ஃபீனிக்ஸ் மற்றும் பல்லோடியம் மாலில் வண்ண விளக்குகளுடன் ஒளிர செய்வதில் பெருமையடைகிறேன்.
நான் சென்னைவாசியாக இருந்து கிறிஸ்துமஸ் வரவேற்பு விழாவில் சமய பேதங்கற்ற குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களை ஒன்றிணைத்து பார்ப்பதில் மகிழ்ச்சி. இதே போல் உலகமெங்கும் அமைதி, நற்பண்புடன் அனைவரும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ வேண்டும் என்றார்