பூதப்பாண்டி – ஜனவரி -21 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள வரகுணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளிமுத்து (65) இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து மாலை சுமார் 6..45 மணி யளவில் வேலை முடிந்துவீட்டிற்க்கு திரும்பி சாலையோரமாக நடந்து வரும் போது வர குணமங்கலம் ஜிம் அருகே வரும் போது எதிரே வந்த மத்தியாஸ் நகர் பகுதியை சேர்ந்த அஜித் (25) என்பவர் தனது பைக்கில் வந்து இவர் மீது மோதியதில் தலை, இடுப்பு மற்றும் இடது காலில் பயங்கர காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காயம் பட்ட முத்துவின் மனைவி மரியம்மாள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.