நாகர்கோவில் அக் 6
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில்
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அபாயகரமாக அதிக ஒலி எழுப்பி போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தி வேகமாக வந்த நவீன காரை ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் சென்றது உடனடியாக அந்த வாகனத்தை விரட்டி சென்று
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து ஆவணங்களை சரிபார்த்து, மது போதையில் வாகனம் ஓட்டிவரப்பட்டதா என்பதை ஆய்வு செய்தார். பின்னர் அந்த வாகனத்தில்
வழக்கத்திற்கு மாறாக ஆல்ட்ரேஷன் செய்திருப்பதை கண்டு அதனை கழற்றி அப்புறப்படுத்த அறிவுறுத்தி
அபராதம் விதித்தார்.