கன்னியாகுமரி ஜன 2
குமரி மாவட்டம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் பாலசுப்பிரமணியம் 50 என்பவர் நேற்று காலை நடைபயிற்சி செல்லும் போது கன்னியாகுமரிக்கு சுற்றுலா வாகனத்தில் வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு பாலசுப்பிரமணியத்திடம் கேட்க, அவர் சாலையில் நின்று புகைப்படம் எடுக்கும் போது அவ்வழியே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர், குமரி மாவட்டம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை நான்குவழிச் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளார். அப்போது, குமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்களை புகைப்படம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டு உள்ளார். இதற்கு உதவுவதாகக் கூறிய பாலசுப்பிரமணியம், அவர்களை போட்டோ எடுக்க முயன்று உள்ளார். அப்போது, அங்கு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இந்த சொகுசு கார் மோதியதில், பாலசுப்பிரமணியன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தங்களை போட்டோ எடுத்துத் தருமாறு கேட்கவே அவர்களுக்கு உதவும் பொருட்டு போட்டோ எடுக்க முயன்று கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.